Friday, December 15, 2023

ஆசாரக்கோவை பாடல் 1 - 5


கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய

ஆசாரக்கோவை



 





பாடல் 1 - 5 

பாடல் 1

நன்றியறிதல் பொறையுடைமை யின்சொலோ
டின்னாத வெவ்வுயிர்க்கு ஞ்செய்யாமைகல்வியோ
டொப்புரவாற்றவறிதலறிவுடைமை

நல்லினத்தாரோடுநட்டலிவையெட்டுஞ்
சொல்லியவாசாரவித்து

பொருள்

தனக்கு பிறர் செய்த நன்மைகளை அறிதலும் தனக்கு பிறர் செய்த தீமைகளை பொருத்தலும் இன்சொல்லும் எல்லா உயிர்க்கும் துன்பம் செய்யாமையும் கல்வியும் ஒப்பிட்டு உணர்ந்து அறிதலும்  அறிவுடைமையும் நல்ல பண்புகளையுடையவருடன் நட்பு பாராட்டுவதும் மாகிய எட்டு பண்புகளும் பின்பற்றவேண்டுய ஆசாரங்களாம்

பாடல் 2

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம்வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றங்கல்வி, நோயின்மை
யிலக்கணத்தாலிவ் வெட்டுமெய் துபவென்று
மொழுக்கம் பிழையாதவர்

பொருள்

நித்தமும் அசாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவருக்கு நல்ல வாழ்கை சூழல் நீண்ட ஆயுள் செல்வம் அழகு நிலம் மகிழ்ச்சி கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியம் எனும் இவை எட்டும் அவைகளின் இலக்கணத்துடன் அமையப்பெறுவர்

பாடல் 3

தக்கிணைவேள்வி தவங்கல்வியிந்நான்கு
முப்பாலொ ழுக்கினாற்காத் துய்க்கவுய்யாக்கா
லெப்பா லுமாகாகெடும்

பொருள்

சிறப்புடன் வாழ நான்கு நல்ல செயல்களான பெரியோர்களை பேணுதல் நல்ல செயல்களை செய்தல் தியானத்தால் மனதை செம்மை படுத்துதல் கல்வி கற்றல்  என்னும் இவை நான்கையும் முப்பால் எனப்படும் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் மூலம் செய்யாவிடில் இந்நான்கும் வாழ்வில் பயனில்லாமல் போகும்

பாடல் 4

வைகறையாமந் துயிலெழுந் துதான் செய்யு
நல்லறமுமொ ண்பொருளுஞ்சிந்தித் துவாய்வதிற்
றந்தையுந் தாயுந்தொழுதெழுகவென்பதே
முந்தையோர் கண்டமுறை

பொருள்

வைகறை இறுதி ஜாமத்தில் உறக்கத்தில் இருந்து விழித்து காலைக்கடன்களை முடித்து அன்று  செய்ய வேண்டிய நல்ல செயல்களையும் அழகான வாழ்வை அமைத்து தரும் பொருளை ஈட்டும் செயல்களை மனதில் ஆலோசித்து தந்தை தாயை வணங்கி அன்றைய காரியத்தி தொடங்குக என்பது முன்னோர் சொன்ன முறை.

பாடல் 5

எச்சிலார் தீண்டார்பசுப்பார்ப்பார் தீத்தேவ
ருச்சந்தலையோடி வையென்பயாவருந்
திடபததா றறீண்டாப்பொருள்

பொருள்

பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை எனும் இவை  ஐந்தும் தீண்டப்பட கூடாது தீண்டினால் இவை  ஐந்தும் கடும் விளைவுகளைத்  தரும்

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் ஒரு ராஜாங்க அமைப்பாக காணும் நிலையில் பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை என்பவை இளவரசர் ராஜகுரு படைத்  தளபதி மஹாராணி மகாராஜா  என்று ஐந்து அரசவை பதவிகளை குறிக்கின்றது இந்த ஐந்து அரசவை பதவிகளை யாரொருவர் சீண்டினாலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரும்.

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் வான சாஸ்திராத்தை  வைத்து பார்கையில் பசு சான்றோர் நெருப்பு தேவர்கள் உச்சந்தலை என்பவை புதன் குரு செவ்வாய் சந்திரன் சூரியன் என்று ஐந்து கிரஹங்களை குறிக்கின்றது இந்த ஐந்து கிரகங்களையும் சனி அல்லது ராகு சீண்டினால் கடும் விளைவுகளைத்  தரும்.






No comments:

Post a Comment

Geopolitics at Pause

 Geopolitics at Pause As an author there is a self-giving freedom for imagination and a diplomatic freedom of expressing the same. Not all t...