கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய
ஆசாரக்கோவை
பாடல் 11 - 15
பாடல் 11
உடுத்தலால்
நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட்பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை
பொருள்
ஆடையின் பயன்பாட்டினை உரைக்கும் பாடல்
இதில் ஓர் ஆடை உடுத்தி நீராடுதல் சிறப்பு இரண்டு ஆடைகள் உடுத்தி உணவு உண்பது சிறப்பு
நீரில் துவைத்த ஆடையை அதே நீரில் பிழிவது சிறப்பல்ல ஒரு ஆடையை உடுத்தி கற்றோர் சபைமுன்
வருவது சிறப்பல்ல இவையாவும் முந்தையோர் கண்ட முறை
மறை பொருள்
அக்காலத்தில் நதிகளில் நீராடுவது வழக்கம்
அவ்வாறு நதிகளில் நீராடும் பொருட்டு தனித்து நீராடாமல் மற்றவர்களுடன் இணைந்து நீராடுவது
ஆபத்தான நிலைகளிலிருந்து காப்பாற்றும் மேலும் விருந்தோம்பலை மையப்படுத்தி கூறுகையில்
உணவு உண்ணும் பொழுது ஒருவர் இல்லாமல் இருவராக அமர்ந்து உணவை பகிர்ந்து உண்பது சிறப்பு
அதுபோல நோயால் அவதிப்பட்டு இருக்கும் காலங்களில் உடுத்திய ஆடையை மீண்டும் உடுத்தது
இருப்பது சிறப்பு மேலும் பலர் இறக்கும் சபையில் தனது கருத்தை மட்டும் மையப்படுதல் நன்றன்று
பிறரின் கருத்துக்களையும் கேட்டு இருத்தல் சிறந்தது என்பவை முந்தையோர் கண்ட முறை
பாடல் 12
தலையுரைத்த
எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறருடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து
பொருள்
தலையில் எண்ணெய் வைத்தபின் மற்ற பொருட்களை
தொடாமல் இருப்பது நல்லது மற்றவர்கள் உடுத்தி
கலைந்த ஆடையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
பிறர் அவசரம் என்று ஒரு செயலை சொன்னாலும் மற்றவர்களின் காலனியை பயன்படுத்தாமல்
இருப்பது நல்லது
மறை பொருள்
ஒருவர் தான் பட்ட கடனை பிறரிடம் நகர்தல்
தவறு பிறர் செய்த செயல்களை தனது என்று உரைப்பது தவறு எத்தகைய நிலையிலும் பிறர் செய்த
தவறான செயல்களை செய்யாமல் இருத்தல் நல்லது
பாடல் 13
நீருள்
நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்
கீறார் இராமரமும் சேரார் இடரெஎனினும்
நீர்தொடா தெண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை
பொருள்
தனது பிம்பத்தை நீரில் பார்ப்பது நல்லது
அல்ல தேவை இல்லாமல் நிலத்தை சீண்டுவது நல்லது அல்ல இரவு நேரங்களில் மரங்களின் அருகில்
செல்லாது நல்லது அல்ல விரல்களில் நீர் தொடாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் நல்லது அல்ல எண்ணெய் தேய்த்துக்கொண்டபின் நீராடாமல்
அசுத்தங்களை பார்ப்பது நல்லது அல்ல .
மறை பொருள்
ஓடாமல் ஓரிடத்தில் தேங்கி நிற்கும் நீரில்
விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆகையால் அத்தகைய நீர்நிலைகளில் முகத்தை அழகு பார்ப்பது நல்லது
அல்ல மண் தரை பலர் நடக்கும் தளம் அதில் புழுக்கள் இருப்பதனால் மண்தரையை சீண்டுதல் நல்லது
அல்ல இரவு நேரங்களில் மரங்கள் கரியமில வாயுவை
தருவதனால் இரவு நேரங்களில் மரங்களின் அருகில் செல்வது நல்லது அல்ல எண்ணெய்யின் மேல்
தூசி பற்றுவதால் விரல்களில் நீர் தொடாமல் எண்ணெய்
பொருட்களை தொடுவது நல்லது அல்ல எண்ணெய் தேய்த்த பின் கண்ணில் உஷ்ணம் வருவதால் அது அசுத்தத்தின்மேல்
உள்ள நுண்ணுயிரிகளை கிளறும் ஆகையால் எண்ணெய் தேய்த்தபின் நீராடாமல் அசுத்தங்களை பார்ப்பது
நல்லடி அல்ல
பாடல் 14
நீராடும்
போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்த தெனினும் தலையொழிந் தாடாரே
ஆய்ந்த அறிவினவர்
பொருள்
நீராடும் நிலைகள் தேங்கிய நீரை கொண்டதாக
இருக்கும் அங்கு நீராடும் பொழுது சிறுநீர் கழித்தல் எச்சில் உமிழ்தல் நீரில் விளையாடுதல் போன்ற செயல்களை
தவிர்க்க வேண்டும் தலைமுடியை அவிழ்த்து நீராடுதல் நல்லது அல்ல
பாடல் 15
ஐம்பூதம்
பார்ப்பார் பசுத்திங்கள் நாயிறு
தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்
பொருள்
இயற்கையில் ஐந்து பூதங்கள் சமநிலையில்
இயங்கும்போது இயற்கை சீராக இயங்கும் அதுபோல உடம்பும் அதை சார்ந்த ஐம்புலன்களும் சீராக இயங்க நல்ல சிந்தனை
ஆரோக்கியமான உணவு தேவையான உறக்கம் மற்றும் உடல் உழைப்பு நன்றாக இருத்தல் வேண்டும்
மறை பொருள்
வான சாஸ்திரத்தில் சூரியனும் சந்திரனும்
ஐம்பூதங்களைக் குறிக்கும் குரு புதன் சுக்கிரன் செவ்வாய் மற்றும் சனியும் ராகுவின்
பிடியில் சிக்கும் நிலையில் உடல் ஆரோக்கியம் குன்றி ஐம்புலன்களும் கெடும்