Monday, December 18, 2023

ஆசாரக்கோவை பாடல் 6 - 10

கயத்தூர் பெருவாயின் முள்ளியார் இயற்றிய 

ஆசாரக்கோவை



 





பாடல் 6 - 10

பாடல் 6

எச்சிலார்நோக்கார் புலைதிங்கணாய்நாயி
றத் தகவீழ்மீனோடிவவைந் துந்தெற்றென
நன்கறிவார் நாளும்விரைந்து

பொருள்

நல்லறிவும் கற்றதனால் அமைந்த தெளிவும் உடைய மக்கள் எந்நாளும் அசுத்தம் சந்திரன் நாய் சூரியன் விண்மீன் எனப்படும் ஏரி நட்சத்திரம் இவை இந்தையும் கல்வியும் பகுத்தறிவும் இல்லாதவர் போல பார்க்கமாட்டார்கள்.

மறை பொருள்

புலவர் உரைக்கும் ஐந்து காரனிகளும் வான சாஸ்திராத்தை  வைத்து பார்கையில் அசுத்தம் சந்திரன் நாய் சூரியன் விண்மீன் என்பவை சனி சந்திரன் ராகு சூரியன் சுக்ரனாகிய ஐந்து கிரஹங்களை குறிக்கின்றது இந்த ஐந்து கிரகங்களையும் கற்றவர்கள் பகுத்து ஆராயாமல்  மேலோட்டமாக பார்க்கமாட்டார்கள்.

மறை பொருள்

அசுத்தம் எனும் குப்பையையும் தெளிவு தரும் சந்திரனையும் கண்டு பகுத்து அறியாது தவிக்கும் நாயின் நிலைபோல பகுத்து அறிவோர் நில்லாமல் ஒளிதரும் சூரியனைப்போலவும் இரவில் தன் வழியில் செல்லும் விண்மீனைப்போல சிறந்து காண்பர்

பாடல் 7

எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்க மிரண்டும் இணைவிழைச்சு வாயில்
விழைச்சிவை எச்சிந் நான்கு
பொருள்

பொருள்

உடல் சார்ந்த பல இயக்கங்கள் உள்ளன அவற்றுள் தனிநபர் சார்ந்த இரு இயக்கங்களான மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகியவைகளும் இருவர் சார்ந்த காதல் மற்றும் காமம் வழி அமையும் விழிச்சிகளையும்  அவற்றின் இயக்கங்களிப்பின் உடலை நீரால் தூமை செய்வது நன்மை தரும் மேலும் இவை நான்கு இயக்கங்களும் மறைவில் இயக்குதல் நன்று

மறை பொருள்

உயிரியல் வழி இப்பாடல் காணும் நிலையில் மலம் சிறுநீர் காதல் காமம் வழி வரும் அசுத்தங்கள் என்று ஒதுக்கிவிட இயலாது இவைகள் செடி கொடிகளுக்கு நன்மையும் புதிய உயிர் பிறக்க நல்லதோர் எச்சிலாக பயன்பெறுகிறது

மறை பொருள்

வான சாஸ்திரத்தில் காலபுருஷ தத்துதின் படி 8ஆம் வீடான விருச்சிகத்தில் அமையும் உடல் உறுப்புக்கள் மாலன் சீறுநீர் மற்றும் காமம் சார்ந்த இயக்கங்களுக்கு பயன்படுபவை இத்தகைய உறுப்புக்கள் சீராக இயங்கினால் நோய் நொடி இல்லாது நீண்ட ஆயுளைத்தரும்  அவற்றின் சீர்கேடு நீண்ட கடும் நோயினைத்  தரும் மேலும் இங்கு மதி நீச்சம் பெறுவதனால் மனம் சனி மற்றும் ராகுவால் இயக்கப்பட்டு உறுப்புகளுக்கு சீர்கேடு தரும் நிலையை தவிர்க்க நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவது நன்மை தரும்

பாடல் 8

நால்வகை யெச்சிலும் நன்கு கடைப்பிடித்
தோதார் உரையார் வளராரே  எஞ்ஞான்றும்
மேதைக ளாகுறுவார்
பொருள்

பொருள்

நல்லவைகளை கற்றறிதலும் பயிற்சியினால் உடலை பேணுதலும் ஆரோக்கியமான உணவை உண்பதும் சீராக மலங்களை அகற்றலுமாகிய இந்நான்கு சரிவர செய்த்து நல்லவைகளைச் சொல்லி தீயவைகளை சொல்லாமல் தவிர்த்து சுற்றிநடைபதி உறங்காது உணர்ந்து வாழ்வோர் மேதைகலாகும் நிலை பெறுவர்.

 பாடல் 9

நாளநதிகோறின் றுகணகழீஇத்தெய்வத்தைத்
தானறியுமாற்றாழுதெழுகல்கந்தி
நின்று தொழுதல் பழி

பொருள்

காலை பொழுதில் கண் விழித்து பல் துவக்கி காலைக்கடன்களை முடித்தபின் தான்  வணங்கும் தெய்வத்தை தொழுது அன்றைய நாளின் வேலைகளை துவக்க வேண்டும் பின்பு மாலை நேரத்தில்  தான்  வணங்கும் தெய்வத்தை நின்றபடி இல்லாமல் அமர்ந்து தொழுதால் நன்று.

 பாடல் 10

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல்  ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலூறல்  ஈரைந்துழ்

பொருள்

நீராடல் என்பது உடம்பை சுத்தப்படுத்தும் செயல் கீழ்வரும் பத்து நிகழ்வுகளில் பொருட்டு நீராடுதல் அல்லது நீரால் சுத்தப்படுத்துதல் நன்மை தரும் அச்செயல்கள் யாதெனில் தீய கனா கண்ட பின் தூங்கி எழுந்த பின் மலம் கழித்த பின் சிறுநீர் கழித்தபின் உண்ட உணவு செரிக்காமல் வெளிவந்தபின்  அசுத்த பொருட்களை தொட்டபின் அசுத்த செயலை செய்தவருடன் நெருக்கத்தில் இருந்த பின் தலை முடி திருத்திய பின்  கடவுளை தொழும் முன் உணவு அருந்தும் முன் என்பனவாம் 

No comments:

Post a Comment

Geopolitics at Pause

 Geopolitics at Pause As an author there is a self-giving freedom for imagination and a diplomatic freedom of expressing the same. Not all t...